Advertisment

"உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை சிறப்படைய செய்கிறது" - விஷால் நன்றி!

jgdjdh

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் விஷால். அதில்...

Advertisment

"வணக்கம்

எனது பிறந்தநாளில் என் பாசத்திற்கும், பெருமைக்குரிய அன்பு ரசிகர்களின் விருப்பத்தின்படி Common dp, Mashup வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட என் அன்பான நண்பர்களுக்கு நன்றி. மக்கள் நல இயக்கத்தின் சார்பாக மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் அரசு கோட்பாடுகளின்படி நீங்கள் செய்த அனைத்து சமூக செயல்பாட்டினை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

Advertisment

மேலும் எனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், தொலைக்காட்சி அன்பர்கள் மற்றும் செய்திதொடர்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்தநாளை சிறப்படைய செய்கிறது. கரோனா என்னும் கொடிய நோயிலிருந்து நம் மக்களை காப்பது நமது கடமை. இந்தியனாக தேசத்தை பாதுகாப்பது நம் பெருமை. கரோனாவை ஒழிப்போம்! இயன்றதை செய்வோம்! இல்லாதவர்களுக்கு!!

உங்களவன்

விஷால்" என கூறியுள்ளார்.

vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe