vishal thanked cm stalin

தமிழ் திரைத் துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரால் "கலைஞர் கலைத்துறை வித்தகர்" என்ற பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையைமுதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.மேலும் இந்த விருது வழங்கும் குழுவிற்கு எஸ்.பி முத்துராமன் தலைவராகவும், நாசர் மற்றும் கரு . பழனியப்பன் ஆகிய இருவரையும் உறுப்பினராக கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவால்பரிந்துரைக்கப்பட்டு விருது பெரும் நபர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமாகவும் வழங்கப்படும். இவ்விருது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளானஜூன் 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால்வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் திரைத்துறை கலைஞர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளதைநடிகரும் விஷால் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், தமிழ் திரையுலகையும் பிரிக்க முடியாது. வரிவிலக்கு முதல் பையனூரில் வீடு கட்ட இடம் வரை திரைத்துறையினர் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார். தமிழ் திரையுலகை தாய் வீடாக நினைத்து வழி நடத்திய கலைஞர் அவர்களின் பெயரால் அவரது பிறந்தநாள் அன்று தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும்”, ரூபாய் பத்து லட்சம் ரொக்கப்பணமும் மற்றும் நினைவுப்பரிசும் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும் என்று அறிவித்தபோதே அகமகிழ்ந்தோம்.

Advertisment

அதற்கு ஒரு குழு அமைத்து அந்த குழுவின் தலைவராக மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்களையும், உறுப்பினர்களாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களையும், மற்றொரு உறுப்பினராக நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன் அவர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.