Advertisment

ஆக்‌ஷன் டீமோடு கைகோர்க்கும் விஷால்!

துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு விஷால்- மிஷ்கின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மிஷ்கின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் அந்த படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார்.

Advertisment

vxv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதையடுத்து விஷால் எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் ‘சக்ரா’ படத்திலும் நடித்துவருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஷால் அடுத்து நான்காவதாகஇயக்குனர் சுந்தர்.சியுடன் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மதகஜராஜா, ஆம்பள, ஆக்‌ஷன் ஆகிய மூன்று படங்கள் உருவாயின. இதில் ‘மதகஜராஜா’ படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்கள் திரைக்கு வந்து ஆம்பள படம் ஓரளவு வெற்றிபெற்று, ஆக்‌ஷன் படம் தோல்வியை தழுவியது. சுந்தர் சி தற்போது அரண்மனை 3ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு விஷாலை வைத்து அடுத்த படவேலைகளை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Action sundar c Tamanna vishal
இதையும் படியுங்கள்
Subscribe