Advertisment

முன்னாள் முதலமைச்சர் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்; அரசியல் மோகமா?

vishal tattooed late cm mgr face in his chest

'லத்தி' படத்தை அடுத்து 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வரும் விஷால் சினிமாவை தாண்டி அரசியல் ஆர்வத்தோடு சில விஷயங்களைசெய்து வருகிறார். ஒரு படி மேலே போய் 2017ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் சில காரணங்களை குறிப்பிட்டு விஷாலின் வேட்புமனு,தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து பல பேட்டிகளில் தற்போது வரை, "அரசியலில் நுழைய எந்த எண்ணமும் இல்லை. மக்களுக்குத் தேவையானதை செய்தாலே அது அரசியல்தான். அந்த வகையில் அனைவருமே அரசியல்வாதி தான்" என்ற கருத்தை கூறி வருகிறார். சினிமாவில் இருப்பவர்களுக்குஅரசியல் மோகம்எம்.ஜி.ஆரில்தொடங்கி தற்போது இருக்கும் விஜய் வரை தொடர்கிற நிலையில் விஷாலை மட்டும் விட்டு வைத்துவிடுமாஎன்ன.

Advertisment

இதற்கு முன்னோடியாகத்திகழ்ந்த எம்.ஜி.ஆர், சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்து மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து வரும் அவரது முகத்தை, தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார் விஷால். இது தொடர்பான புகைப்படத்தைவிஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளநிலையில் அப்புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe