Published on 28/01/2019 | Edited on 28/01/2019

'சண்டக்கோழி 2' படத்திற்கு பிறகு 'அயோக்யா' படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆக்சன், காமெடி என கமர்சியல் படமாக உருவாகும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளனர். மேலும் விஷால், சுந்தர்.சி மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கவுள்ளார். ஏற்கனவே தமன்னா, ஜெகபதி பாபு ஆகியோர் 'கத்திச்சண்டை' படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.