Skip to main content

மீண்டும் 'துப்பறிவாளன் 2'; விஷாலின் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

vishal starring thupparivalan 2 movie new update out now

 

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா இருவரையும் வைத்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். இளையராஜா இசைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது.

 

இதனிடையே நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து மேடையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இதனால் 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழும்பியது. இதனை தொடர்ந்து 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகத்தை தாமே இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

 

ad

 

இந்நிலையில் நடிகர் விஷால் இப்படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  'துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் லண்டனில் தொடங்கி ஏப்ரல் மாதம் நிறைவடையும் எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு துப்பறிவாளன் படத்தின் அப்டேட் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்” - நீதிமன்றத்தில் வாதம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ilaiyaraaja copy write issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் என்றும், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Next Story

ஆபாச வசனம் - விஜய்யைத் தொடர்ந்து விஷால்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vishal rathnam trailer released

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளியானது. பின்பு கடந்த மார்ச் 3, படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியானது. அடுத்ததாக ‘எதனால’ பாடல் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் பிரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.  அந்த வகையில் ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையோர பகுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு ஆபத்து வருகிறது. அவரை காப்பாற்ற விஷால் முயற்சி எடுக்கிறார். எதனால் பிரியா பவானிக்கு பிரச்சனை வந்தது. விஷால் அவரை காப்பாற்றினாரா இல்லையா, விஷாலுக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் என்ன தொடர்பு? ஆகியவற்றை விரிவாக விவரிக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் விஷால், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆக்ரோஷமாக சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுகின்றனர்.
 
இந்த ட்ரைலரில் விஷால் பேசிய அதே வசனத்தை, கடந்த ஆண்டு வெளியான லியோ பட ட்ரைலரில் விஜய் பேசினார். அப்போது அந்த வசனத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்ப, பின்பு அதை திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் விஷாலும் அதே வசனத்தை பேசியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.