ADVERTISEMENT

"என் கடந்த காலத்தை நான் பார்ப்பதில்லை" - வெளிப்படையாகப் பேசிய விஷால்

01:08 PM Sep 04, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் படக்குழு கலந்து கொண்டு படம் குறித்து நிறைய அனுபவங்களைப் பகிர்ந்தார்.

அப்போது விஷால் பேசுகையில், "ஓபனாக சொல்கிறேன். நிறைய பேர் ஃபோன் பண்ணி, ‘ஏன் ஆதிக் கூட படம் பண்றீங்க... அவருடைய முந்தைய படங்கள் பார்த்திருக்கீங்களா' என கேட்டனர். முதலில் என் வாழ்க்கையிலே நான் கடந்த காலத்தை பற்றி பார்ப்பதில்லை. மற்றவர்களுடைய கடந்த காலத்தை பற்றி என்றைக்குமே நான் பார்த்தது கிடையாது. முன்னாடி போகிற பாதையை மட்டும் தான் பார்ப்பேன்.

ஆதிக் ரவிச்சந்திரன் கிட்டத்தட்ட 7 வருஷமாக என்னிடம் டேட் கேட்டு முயற்சித்து வந்தார். எனக்கு அடுத்தடுத்து படப்பிடிப்புகளால் பண்ண முடியல. திடீர்னு ஒருநாள் நைட்டு 2 மணிக்கு ஃபோன் பண்ணி, 'நான் தற்கொலை செய்யப் போகிறேன். அதற்கு நீங்கதான் காரணம் என லெட்டர் எழுதி வச்சிட்டு சாகப் போறேன்' என சொல்லிவிட்டு கட் பண்ணிட்டான். அப்புறம் நான் ஃபோன் பண்ணி கேட்ட பிறகு 'நீங்க டேட் கொடுக்காத காரணத்தினால் தான் நான் ரோட்டுல நிக்கிறேன்' என்றான். அப்புறம் 'கடவுள் எல்லாருக்கும் ஒரு சமயத்தில் கை கொடுப்பார். என்னைக்கும் அது நடக்கும்' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT