Skip to main content

"நீ தைரியமாக இரு... எவன் வந்தாலும் வெட்டலாம்'' - சீறிய கார்த்திக்... நெகிழ்ந்த விஷால் 

Published on 25/04/2018 | Edited on 27/04/2018
vishal

நீண்ட நாட்களாக நடைபெற்ற சினிமா ஸ்ட்ரைக் சமீபத்தில் முடிவு பெற்றதையடுத்து முதல் நிகழ்ச்சியாக கார்த்திக், மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இப்படத்தில் நாயகியாக நடித்த ரெஜினா கசாண்ட்ரா, வரலெட்சுமி சரத்குமார் மற்றும் படக்குழுவினர், சூர்யா, விஷால், சாந்தணு, ஆர்யா, கார்த்திக், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் ஸ்ட்ரைக்கிற்கு ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் பேசுகையில்.... "மிஸ்டர்.சந்திரமௌலி என்றாலே அது கார்த்திக் சார் தான். நடிகர் சங்கப் போராட்டத்தின் போது என்ன பிரச்சனை வந்தாலும் நீ தைரியமாக இரு யார் வந்தாலும் வெட்டலாம் என்று கார்த்திக் சார் கூறி எனக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் சினிமா வேலைநிறுத்தத்தின் போது உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கான பெருமை அல்ல. இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திருப்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளோம். எனது நண்பர் திருவுக்காகவும், 'வரு'வுக்காகவும் தான் இங்கு வந்தேன். ஏற்கனவே திருவுடன் மூன்று படங்களில் இணைந்துவிட்டேன். மற்றொரு படத்திலும் விரைவில் இணைய இருக்கிறோம்.

 


நானும், நடிகர் கார்த்திக் அவர்களும் 'அந்த நிகழ்ச்சியில் உண்மையில் பெண் பார்க்கிறீர்களா இல்லையா?' என்று பல முறை ஆர்யாவிடம் கேட்டிருக்கிறோம். அதற்கு இதுவரை எங்களுக்கு பதில் வரவில்லை. அந்த நிகழ்ச்சியில் உண்மையில் என்ன நடந்தது என்று ஆர்யா தான் கூற வேண்டும். அவர் எப்பொழுதும் சும்மா செய்யும் வேலையை அந்த நிகழ்ச்சியில் காசு கொடுத்து செய்ய வைத்திருக்கிறார்கள்" என்றார் கிண்டலாக.

 

 

 

 

சார்ந்த செய்திகள்