‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெலியீட்டு விழாவில் அப்படத்தின் நாயகி நயன்தாரா, இயக்குனர் சக்ரி டோலட்டி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக ராதாரவி, கரு.பழனியப்பன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் நயன்தாராவை பற்றி பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலர் ராதாரவி மீது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்தச் சர்ச்சையை அடுத்து நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று விஷாலின் ட்விட்டர் கணக்கை மேற்கொளிட்டு பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இந்நிலையில், இது குறித்து பதிவிட்டுள்ள விஷால், “அன்புள்ள ராதாரவி சார். ஆம், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.