sandakozhi

Advertisment

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி' 2 படம் வரும் விஜயதசமியை முன்னிட்டு 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது அதில் விஷால் படம் குறித்து பேசியபோது....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும்போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். 'சண்டக்கோழி 2' எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, 'சண்டக்கோழி 2' வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார். 'சண்டக்கோழி 2' திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ஹிட். முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி" என்றார்.

Advertisment

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/5veE9T2j144.jpg?itok=ADPdfFxb","video_url":" Video (Responsive, autoplaying)."]}