vishal said Karunanidhi and Stalin name should be placed Actors Association building

Advertisment

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் லத்தி படத்தில் நடித்துள்ளார். 'ராணா ப்ரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளஇப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விஷால், சுனைனா உள்ளிட்ட படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இவ்விழாவில் பேசிய விஷால், "நானும் உதயநிதியும் சின்ன வயசுல இருந்தே நல்ல நண்பர்கள், ஸ்கூல், காலேஜ் ஒன்னாதான் படிச்சோம். ஒன்னாதான் விளையாடுவோம். ரமணாவும், நந்தாவும் முதல் தடவையா இந்த படத்தை தயாரிப்பதால் உதயநிதியை வைத்து டீசர் மட்டும் வெளியிட சொல்லிருந்தேன் அதே போல அவனும்வந்து டீசரை ரிலீஸ் செய்துகொடுத்திருக்கான், ரொம்ப நன்றி உதய்.

தேர்தலுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியேஉதயநிதி கிட்ட நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் அய்யாபெயரும், ஸ்டாலின் அங்கிள் பெயரும்இடம் பெறணுங்கிறதுஎன்னோட ஆசைன்னு சொன்னேன். இதை உதய் என் நண்பன் என்பதால் சொல்லல, உண்மையாவே சொல்றேன். ஏனென்றால்ஒரு வரலாற்று கட்டிடத்தில் வரலாற்று பெயர்கள் இடம் பெற வேண்டும் . இது என்னுடைய ஆசை மட்டும் அல்ல, நடிகர்சங்கத்தினரின் ஆசையும் கூட. அது கூடிய விரைவில் நிறைவேறப் போவதால் எனக்கு சந்தோசமாக இருக்கிறது" என்றார்.