Advertisment

'ப்ளூ சட்டை' மாறனுக்கும் 'இட் இஸ் பிரஷாந்த்'துக்கும் விஷால் கோரிக்கை!

சண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த திங்களன்று சென்னையில் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால், சண்டக்கோழி 2 தனது 25ஆவது படமாக அமைந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். படம் குறித்தும், சண்டக்கோழி 1 தனக்கு அமைந்தது குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட விஷால், இறுதியாக பத்திரிகையாளர்களை நோக்கி ஒரு கோரிக்கையை வைத்தார்.

Advertisment

vishal

"திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பத்திரிகையாளர் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாட்கள் கழித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள். கண்டிப்பா இது உங்ககருத்து சுதந்திரம்தான், நீங்கள் காசு கொடுத்து படம் பார்த்துவிட்டுதான் எழுதுகிறீர்கள். அதை நான் மறுக்க மாட்டேன், அதே நேரம் தயாரிப்பாளர்களும் வாழ வேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நான் சொல்வது எல்லோரையும் இல்லை. குறிப்பிட்ட சில பத்திரிகையாளர் நண்பர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டிஜிட்டல் மீடியா, யூட்யூப் நண்பர்களுக்குத்தான் இந்த வேண்டுகோள். மற்றபடி தினசரி பத்திரிகையாளர்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிருபர்களுக்கோ கிடையாது. இந்த வேண்டுகோளை ஏன் நான் வைக்கிறேன் என்றால், ஒரு மூன்று நாட்கள் டைம் கொடுத்தால் அவர்களும் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதுக்காகத்தான் சொல்றேன்" என்றார்.

blue sattai

Advertisment

விஷால் தன் பேச்சில் குறிப்பிட்டது யூ-ட்யூப் விமர்சகர்களைத்தான் என்றும் அவர்களுக்குத்தான் அந்தக் கோரிக்கை என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே. 'மொட்ட சிவா கெட்ட சிவா' போன்ற சில படங்களை கடுமையாக விமர்சித்திருந்தனர் சில யூ-ட்யூப் சினிமா விமர்சகர்கள். அப்பொழுதே திரையுலகில் எதிர்ப்புகள் எழுந்தன. அஜித் நடித்த 'விவேகம்' படத்தை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக 'ப்ளூ சட்டை' மாறன் என்று அறியப்படும் தமிழ் டாக்கீஸ் இளமாறன் இயக்குனர்கள் விஜய் மில்டன், 'ஈட்டி' ரவியரசு உள்ளிட்ட திரைத்துறையினராலும் ரசிகர்களாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படத்தை இவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் கோபமடைந்த கிருத்திகா, மாறனின் ரிவ்யூவுக்கு ஒரு ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மாறன், பிரஷாந்த், கார்த்திக், அபிஷேக் போன்றோர் தமிழில் பிரபலமாக இருக்கும் யூ-ட்யூப் விமர்சகர்கள் ஆவர். இதற்கு முன்பு ஒருமுறை 'மூன்று நாட்கள் கழித்து விமர்சனத்தை வெளியிடு'மாறு விஷால் இவர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனாலும் முதல் நாளில் தான் விமர்சனங்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீண்டும் அவர்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

keerthysuresh sandakozhi2 moviereview vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe