Advertisment

ஆபாச வசனம் - விஜய்யைத் தொடர்ந்து விஷால்!

vishal rathnam trailer released

Advertisment

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளியானது. பின்பு கடந்த மார்ச் 3, படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியானது. அடுத்ததாக ‘எதனால’ பாடல் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் பிரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாகஈடுப்பட்டுள்ளது. அந்த வகையில் ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையோர பகுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு ஆபத்து வருகிறது. அவரைகாப்பாற்ற விஷால் முயற்சி எடுக்கிறார். எதனால் பிரியா பவானிக்கு பிரச்சனை வந்தது. விஷால் அவரை காப்பாற்றினாரா இல்லையா, விஷாலுக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் என்ன தொடர்பு? ஆகியவற்றைவிரிவாக விவரிக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் விஷால், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆக்ரோஷமாக சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுகின்றனர்.

Advertisment

இந்த ட்ரைலரில் விஷால் பேசிய அதே வசனத்தை, கடந்த ஆண்டு வெளியான லியோ பட ட்ரைலரில் விஜய் பேசினார். அப்போது அந்த வசனத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்ப, பின்பு அதை திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் விஷாலும் அதே வசனத்தை பேசியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

director hari actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe