vishal

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரிக்கும் படம் 'அகோரி'. அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் இப்படத்தின் டீசரை இன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளருமான நடிகர் விஷால் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். டீஸரைப் பார்த்த விஷால் படம் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக் குழுனரை வாழ்த்தினார். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர், காமெடி, காதல், சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன. தெலுங்கில் 'சஹா' படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் பட வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். 'அகோரி' படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.