உத்தரப் பிரதேசம், அயோத்தியில் இன்று மிகப்பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்துநிறுவியுள்ளார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். பாடகர் சங்கர் மகாதேவன், ராமர் பாடலைப் பாடினார்.
இதைத்தொடர்ந்து ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் என ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்புக்குரிய பிரதமர் மோடியின் மற்றுமொரு சாதனை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீராம்.
ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.