Skip to main content

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவிற்கு சரிவே கிடையாது'-எடப்பாடி பழனிசாமி பேட்டி   

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
'The decline of the ADMK   No'-Edappadi Palaniswami interview

அதிமுகவிற்கு சரிவே கிடையாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கு  பிரதமர் பலமுறை தமிழகத்திற்கு வந்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பாஜகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள். கோவையில் கூட பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார், அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். இப்படி அவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கின்ற அமைச்சர்களலெல்லாம் இங்கே தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். ஆனால் அதிமுகவில் எங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எங்களுக்காக பிரச்சாரம் செய்தார். எங்கள் கூட்டணியில் இருந்த சில கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் ஒரு சில தொகுதிகளில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆங்காங்கே அந்தந்த இரண்டு மூன்று மாவட்டங்களில் அங்குள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய முடிந்தது.

திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக திமுக அமைச்சர்கள் பல இடங்களில் முகாமிட்டிருந்தார்கள். இதனால் எங்களுடைய மூத்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் வேறு நாடாளுமன்றத் தொகுதியில் சென்று பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் இத்தனைக்கும் இடையில் தான் அதிமுக ஒரு சில வாக்குகள் கூடுதலாக பெற்று வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதோடு இது நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் அல்ல. 2014-ல் இதே கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக மூன்றாவது இடத்திற்கு தான் வந்தது. அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த வாக்குகள் பெற்றது சி.பி.இராதாகிருஷ்ணன். அவர் அதிமுக வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தான் தோல்வி அடைந்தார். ஆனால் திமுக 2 லட்சத்து 17,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே அதிமுகவிற்கு சரிவே கிடையாது'' என்றார்.

Next Story

'விலகுகிறேன்...'- அதிரடி முடிவெடுத்த வி.கே.பாண்டியன்

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
nn


தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒடிசா தேர்தல் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு வி.கே.பாண்டியனே காரணம் என விமர்சனங்கள் எழுந்திருந்தது. முன்னதாகவே 'எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் இல்லை' என நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து வி.கே.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பைப் பெற்றேன். ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மூதாதையர்களின் சொத்துக்கள் தான் தற்போது என் வசம் உள்ளது. நான் ஐஏஎஸ் ஆகும் போது இருந்த சொத்துக்களே இப்போது என்னிடம் உள்ளது' என தெரிவித்துள்ளார்.