Advertisment

முதல்வரை சந்திக்கும் விஷால் அன் கோ....

vishal

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் சினிமா காட்சிகளையும் ரத்து செய்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீ ராம், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

vishal

அதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியபோது...."பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் போது எந்த வித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்த வரை புதுபடங்கள் ரிலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம். எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அடுத்த வாரம் புதன் கிழமை(04/04/2018) அன்று பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும். ஆனால், அதற்கான தகுந்த தீர்வு விரைவில் கிடைக்கும்" என்றார் விஷால்.

Advertisment

vishal

மேலும் பெப்சி தலைவர் ஆர்,கே.செல்வமணி பேசியபோது...."திரை அரங்குகளில் கம்ப்யூட்டர் டிக்கெட்களை கட்டாயம் வழங்க வேண்டும். குறைந்த அளவில் படம் பார்க்க வரும் மக்களிடம் அதிக அளவில் பணம் வாங்குவதால் தான் படம் பார்க்க திரை அரங்குகளை மக்கள் வருவதில்லை. அரசு இதை ஒரு வாரியமாக ஒழுங்கு செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவே வரும் புதன் கிழமை மனு கொடுக்க அனுமதி கேட்டுள்ளோம் கிடைத்தால் அனைவரும் ஒன்றாக பேரணியாக சென்று முதல்வர் மற்றும் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுக்க உள்ளோம்" என்றார் ஆர்.கே செல்வமணி.

FEFSI tamilcinemaupdate theaterstrike vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe