Skip to main content

முதல்வரை சந்திக்கும் விஷால் அன் கோ....

Published on 31/03/2018 | Edited on 02/04/2018
vishal


திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் சினிமா காட்சிகளையும் ரத்து செய்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீ ராம், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

vishal

அதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியபோது...."பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் போது எந்த வித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்த வரை புதுபடங்கள் ரிலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம். எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அடுத்த வாரம் புதன் கிழமை (04/04/2018) அன்று பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும். ஆனால், அதற்கான தகுந்த தீர்வு விரைவில் கிடைக்கும்" என்றார் விஷால்.

vishal

மேலும் பெப்சி தலைவர் ஆர்,கே.செல்வமணி பேசியபோது...."திரை அரங்குகளில் கம்ப்யூட்டர் டிக்கெட்களை கட்டாயம் வழங்க வேண்டும். குறைந்த அளவில் படம் பார்க்க வரும் மக்களிடம் அதிக அளவில் பணம் வாங்குவதால் தான் படம் பார்க்க திரை அரங்குகளை மக்கள் வருவதில்லை. அரசு இதை ஒரு வாரியமாக ஒழுங்கு செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவே வரும் புதன் கிழமை மனு கொடுக்க அனுமதி கேட்டுள்ளோம் கிடைத்தால் அனைவரும் ஒன்றாக பேரணியாக சென்று முதல்வர் மற்றும் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுக்க உள்ளோம்" என்றார் ஆர்.கே செல்வமணி.

சார்ந்த செய்திகள்

Next Story

"இது திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ghgh

 

 

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா சார்ந்த அனைத்து வேலைகளும் மத்திய அரசின் உத்தரவின் படி இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் ஆரம்பமானது. இருந்தும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருந்து வரும் நிலையில் தியேட்டர் அதிபர்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தியேட்டர்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில்...

 

"தமிழ்நாடு திரையரங்குகள் விரைவில் திறக்கப்படாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது ரிலீசுக்காக காத்திருக்கும் அனைத்து திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்குகிறது. அடுத்த 6 மாதங்களில் குறைந்தது 30 தமிழ் திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளது.

 

 

Next Story

நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழ் பட இயக்குனர்கள்!

Published on 31/10/2019 | Edited on 01/11/2019

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இன்று காலை வழங்கினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்து அவர் பேசியபோது... 

 

ns

 

''இன்று காலை 10 மணி அளவில் மதிற்பிற்குரிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஆர்.கே செல்வமணி, பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணை செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் எங்களின் கோரிக்கையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஆண்டிற்கு அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும், திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெரும் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் கிளையை சென்னையிலும் அமைக்கவேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகளை இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

 

 

மேலும் டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் விவாதித்தோம். அப்போது அவர் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நன்கு பதிலளித்தார். மேலும் உடனடியாக விலங்குகள் நல வாரியம் அமைச்சரை தொடர்புகொண்டு அவர்களுடன் வரும் 4ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்திடவும், அதில் அவருடன் நாங்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்து, அதில் நல்ல முடிவு கிடைக்க வழி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பிலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பிலும் எங்கள் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.