vishal next to team again with muthaiya

விஷால் கடைசியாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த படம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. பட புரொமோஷனில் படக்குழு தீவிரமாக நடைபெற்றது. இயக்குநர் ஹரி கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.

Advertisment

ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமரசனத்தையே பெற்றது. இந்த நிலையில் விஷால் தற்போது அவர் இயக்குநராக அறிமுகமாகவுள்ள துப்பறிவாளன் பட பணிகளை கவனித்து வருகிறார். இதற்காக லண்டனில், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றதாக தெரிவித்திருந்தார். முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

vishal next to team again with muthaiya

இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஷாலை வைத்து மருது படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் மீண்டும் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபை ஸ்டார் கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இப்படத்தைத்தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் முத்தையா, கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்போது அவரது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக படம் எடுத்து வருகிறார். மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.