Advertisment

நான்கு மொழிகளில் வெளியாகும் விஷால் படம்!

vishal chakra

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம் 'சக்ரா'. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிக்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முழுவதுமாக முடிந்து, மீண்டும் தமிழ்ப் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்தவுடன் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் இறுதிக்கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இப்படம் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இந்த வார சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ட்ரைலர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படமும் இந்த நான்கு மொழிகளில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் முதல் விஷால் படம் இதுவாகும். இதற்கு முன்பு விஷால் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும், இந்த முறைதான் மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

Advertisment

இந்த அறிவிப்பை விஷாலே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ் ட்ரைலரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், தெலுங்கு ட்ரைலரை ராணாவும், மலையாள ட்ரைலரை மோகன்லாலும், கன்னட ட்ரைலரை யாஷும் வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'துப்பறிவாளன் 2' படத்தைத் தயாரித்து இயக்கி நடித்து வருகிறார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

shrada srinath vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe