Advertisment

புனித் ராஜ்குமார் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய விஷால்

Vishal met the family Puneeth Rajkumar expressed his condolences

Advertisment

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத்திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a560bd19-e025-4dbb-bfe8-84dbedaa5922" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_38.jpg" />

சமீபத்தில் நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு உள்ளிட்டோர் பலர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் நடிகர் விஷால் மறைந்தபுனித ராஜ்குமார்குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

actor vishal puneeth rajkumar puneeth rajkumar death
இதையும் படியுங்கள்
Subscribe