Advertisment

மிஷ்கினை நீக்கிவிட்டு துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் விஷால்?

கடந்த 2017ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் துப்பறிவாளன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் 2 எடுக்கப்படும் என்று அப்போதே அறிவிப்பு வெளியானது. அதன்பின் மிஷ்கின் சைக்கோ படத்தில் பிஸியாக, விஷாலும் வெவ்வேறு படங்களில் பிஸியாகிவிட்டார்.

Advertisment

myskin vishal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கை லண்டனில் விஷால், பிரசன்னா ஆகியோரை வைத்து மிஷ்கின் தொடங்கினார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாகும் துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் தயாரிப்பு செலவு முன்பு கணக்கு போடப்பட்டதைவிட அதிகமாகிவிட்டதால் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது என்று சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் விஷாலின் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது என்பதால் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கிவிட்டு, விஷாலே துப்பறிவாளன் 2வை இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்த செய்திகள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இது மிஷ்கின் கிண்டலாக ஏதோ ஒரு பேட்டியில் பேசியதை வைத்து இவ்வாறு வதந்தி பரப்பட்டு வருகிறது என்றும் ஒருசிலர் சமூக வலைதளங்களில் சொல்கிறார்கள்.

myskin thuparivalan 2 vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe