சண்டக்கோழி-2 படத்தை தொடர்ந்து விஷால் நடித்து வருகிற மே10ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘அயோக்யா’, இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

Advertisment

vishal anisha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் இந்த படம் கடந்த மாதம்ஏப்ரல் 19ஆம் தேதி வெளிவர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விஷால் நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியால் படம் தள்ளிபோனது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் மே 10ஆம் தேதி வெளி வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. மே 7ஆம் தேதி இப்படம் சென்ஸாருக்கு அனுப்பப்பட்டு, U/A சான்றிதழ் இப்படத்திற்கு பெற்றது. இதன் பின்னும் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லபப்ட்டது.

Advertisment

நேற்று (மே 9) வரை தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்த அயோக்யா இன்று (மே 10) காலை வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி காரணமாக வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இதனால் வருத்தமாக ட்வீட் செய்து தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் விஷால். கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற விஷால் அனிஷா ரெட்டி நிகழ்ச்சியை அடுத்து எப்போது விஷாலுக்கு திருமணம் என்று பலரும் எதிர்பார்த்தனர். விஷால் அனிஷ ரெட்டி திருமணம் வருகிற அக்டோபர் மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் தமிழகத்திலா அல்லது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெற்றதுபோல ஆந்திராவில் நடைபெறுகிறதா என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.