vishal mark antony teaser released

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. அதில் உயிர் தப்பிய விஷால் "சில நொடிகளில் வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. இதனை முன்னிட்டு விஜய்யை நேரில் சந்தித்து படத்தின் டீசரை காண்பித்துள்ளார் விஷால். டீசரை பார்த்த விஜய் படக்குழுவை பாராட்டினார். டீசரை பார்க்கையில், டைம் ட்ராவல் பண்ணக்கூடிய ஒரு ஃபோன் இருக்கிறது. அதன் மூலம் கேங்ஸ்டர்களாக இருக்கும் விஷால், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், சுனில் உள்ளிட்டவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குள் நடந்தது என்ன என்பதை ஆக்‌ஷன் கலந்த ஒரு காமெடி படமாக சொல்லியிருப்பது போல் தெரிகிறது.

வெவ்வேறு காலகட்டங்களில் கதை நகர்வதால் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு கெட்டப்புகளில் அனைவரும் தோன்றுகின்றனர். பெரும்பாலும் 80களில்மற்றும் 90களில்இருக்கும் ரெட்ரோ லுக்கில் இருக்கின்றனர். மேலும் "வரலாறு... நல்லவனை எப்போதும் நல்லவன்னு சொல்லும். ஆனால் கெட்டவனை" என்ற வசனம் வரும்போது விஷாலின் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அதோடு “மன்னிக்க நான் என்ன மார்க்கா டா...ஆண்டனி டா..." என விஷால் பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இந்த நிலையில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது.