Advertisment

வித்தியாசமான லுக்; மார்க் ஆண்டனியாக மாறிய விஷால்

vishal in mark antony first look poster released

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தற்போது ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். எனிமி படத் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் விஷால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'மார்க் ஆண்டனி' படக்குழு தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. விஷால் கையில் துப்பாக்கியுடன் வித்தியாசமான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

adhik ravichandran Mark Antony actor vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe