vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f6344767-1060-4d43-ab7c-c3bfc0719452" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_23.jpg" />

Advertisment

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நீதிபதி பி.டி.ஆஷாமுன்பாக விஷால் நேரில் ஆஜரானார். அப்போதுலைகாநிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,லைகாமற்றும் விஷால் இடையே போடப்பட்டஒப்பந்தத்தைசுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.அதற்குபதிலளித்த விஷால், “இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தன்னிடம் வெற்றுப்பேப்பரில்கையெழுத்து வாங்கிவிட்டனர்” எனத் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, “நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும்புத்திசாலித்தனமாகபதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?. இது ஒன்றும்சினிமாஷூட்டிங்அல்ல.கவனமாகபதில் சொல்லுங்கள்” என்றார். பின்பு ‘சண்டக்கோழி2’ படத்தை வெளியிடும் முன்பாகபணத்தைத்திருப்பித் தந்துவிடுவதாககூறினீர்களாஎனக்கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால்,பாஸ்என்றார்.

Advertisment

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இதுபோலபாஸ்என்று எல்லாம்இங்குசொல்லக்கூடாது. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம், இல்லைஎனச்சரியான பதிலை அளிக்க வேண்டும்”எனக்கண்டித்தார். பிறகுலைகாவைத்தவிர வேறு யாரிடமாவது கடன்வாங்கியுள்ளீர்களாஎன்ற கேள்விக்கு, “ஆம்.லைகாவால்தான் அந்த கடனை வாங்க நேரிட்டது” என்று விஷால் பதிலளித்தார். இதையடுத்து நீதிபதி குறுக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்து விஷாலை ஆஜராக உத்தரவிட்டார்.