/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_10.jpg)
'குட்டிப்புலி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா. கிராமப்புற கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் 'புலிக்குத்தி பாண்டி'. பொங்கல் தினத்தையொட்டி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டஇப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முத்தையா கூறிய கதை, விஷாலுக்கு பிடித்துப்போக உடனேஅவர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் முத்தையா-விஷால் கூட்டணியில் 'மருது' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)