Advertisment

எம்.ஜி.ஆர், சிவாஜி வரிசையில் விஷால்; வெளியான வீடியோ

vishal laththi tesar release july24

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. 'ராணா ப்ரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்குகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

லத்தி படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு டீசர் குறித்தஅறிவிப்பைவெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் 24 ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் போலீசாக நடித்து ஹிட்டடித்த சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை சுட்டிக்காட்டி அவர்கள் வரிசையில் விஷாலும்போலீசாக நடித்துள்ளதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்குமுன்பு சத்யம், கதகளி போன்ற படங்களில் விஷால் போலீசாக நடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

actor vishal laththi movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe