/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_22.jpg)
'வீரமே வாகை சூடும்' படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் விஷால் 'துப்பறிவாளன் 2', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இதில் 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்குவதில்இருந்துமிஷ்கின் விலகியதை தொடர்ந்து இப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி இயக்கவும் உள்ளார்.
இந்நிலையில் விஷால் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஷால்அடுத்ததாகஇயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள்கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'மருது' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்ற நிலையில் மீண்டும் விஷால் - முத்தையா இணையவுள்ள செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது. முத்தையா தற்போது கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தை இயக்கி வருவதால்இப்படத்தின் பணிகள் முடித்த பிறகு விஷால் படத்தில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும்எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)