படப்பிடிப்பு தளத்தில் விபத்து... பலத்த காயமடைந்த விஷால்!

vishal

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவான ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. அப்படத்தை முடித்த கையோடு அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், விஷாலுக்கும் வில்லன் நடிகர் பாபு ராஜுக்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி நேற்று (20.07.2021) படமாக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக அப்போது நடந்த விபத்தில் நடிகர் விஷாலின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விஷாலுக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சண்டைக்காட்சி படமாக்கலின்போது விஷால் காயமடையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

actor vishal
இதையும் படியுங்கள்
Subscribe