'அயோக்யா' படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில் விஷால் அடுத்ததாக டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவிந்திரன் தயாரித்து, சுந்தர்.சி இயக்கி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக வி‌ஷால், நாயகியாக நடிக்கும் தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர்.

vishal

Advertisment

அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அதில் காரில் செல்லும் வில்லன்களை நான்கு சக்கரம் உள்ள வெளிநாட்டு பைக்கில் வி‌ஷால் துரத்தி செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த வி‌ஷால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர். விஷாலுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.