விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்...! ஆந்திர பெண்ணை மணக்கிறார்  

vishal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் நடிகர் விஷால் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே விஷாலும், வரலட்சுமியும், காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விஷாலுக்கு அவரது பெற்றோர்கள் புதிய மணமகளை தற்போது தேர்வு செய்துள்ளனர். மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்கவுள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.மேலும் நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

vishal nadigarsangam
இதையும் படியுங்கள்
Subscribe