Advertisment

'லத்தி படத்தில் நேர்ந்த அதே நிகழ்வு அடுத்த படத்திலும்...' - அப்செட்டில் விஷால்

vishal get injured in mark antony shoot

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தற்போது ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்நது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். எனிமி படத் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

Advertisment

இந்நிலையில் 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பில் விஷாலுக்கு அடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடந்த படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் 'லத்தி' படத்திலும் சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு இரண்டுமுறை அடிபட்டு பின்பு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor vishal Mark Antony
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe