irumbu thirai.jpeg

irumbuthirai

விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹாலிவுட்டில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக 'இரும்புத்திரை' திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் இன்று செய்தியாளர்களுக்கு பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா, அயுப் கான், எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

அப்போதுஇந்த திரையிடல் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் மித்ரன் முதல் பாதி மட்டும் வெளியிட்டதை பற்றி பேசியபோது... "எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால் சார். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்துவந்தார். அது 'இரும்புத்திரை' படத்துக்கு நடந்துள்ளது. காரணம் 'இரும்புத்திரை' திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும் என்று நம்பியதால் இப்போதுள்ள சூழலில் இப்படத்துக்கு இந்த திரையிடல் சரியாக இருக்கும் என்று எண்ணி இந்த முடிவை எடுத்தோம். மேலும் 'இரும்புத்திரை' படம் ஆதார் அட்டையினால் ஏற்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்" என்றார்.