vishal follow vijay to meet school students

நடிகர் விஷால் சினிமாவை தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர்கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் விஜய் அண்மையில் விழா நடத்தியது போல தந்து இயக்கத்தின் மூலம் உதவி பெறும் மாணவ மாணவிகளையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து விழா நடத்த விஷால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஷால் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.