Vishal Films has released a new update with the poster

Advertisment

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ராணா ப்ரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்குகிறார். ஹைதராபாத்தில், படப்பிடிப்பின் போது ஒரு சண்டை காட்சியில் விஷாலுக்கு அடிபட்டதை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே 'லத்தி' படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு பூஜையோடு ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.