சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல்  என்ட்ரியா? - விளக்கமளித்த விஷால் 

vishal explained her political rumor

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார். லத்தி படத்தின் படப்பிடிப்புபணிகளைமுடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே நடிகர் விஷால் வரவிருக்கும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் குப்பம் தொகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைஎதிர்த்துபோட்டியிட உள்ளதாக சமூகவலைதளங்களில்தகவல்கள் வெளியாகின. இது ஆந்திரா மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து நடிகர்விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் இதைமுற்றிலும்மறுக்கிறேன். இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமேநடிப்பது எனது எண்ணம். அரசியலில் ஈடுபடுவதோஅல்லது சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துபோட்டியிடுவதோஎனது எண்ணம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

actor vishal Chandrababu Naidu
இதையும் படியுங்கள்
Subscribe