Advertisment

வெளியானது விறுவிறுப்பான 'எனிமி' ட்ரைலர்!

enemy

'அரிமா நம்பி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்க, வில்லனாக ஆர்யா நடித்துள்ளார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

Advertisment

இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ள அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment

முன்னதாக, கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்ட எனிமி படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் ஒன்றரை கோடி பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

enemy actor vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe