enemy

அரிமா நம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகமிர்னாலினி ரவி நடிக்கிறார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வரும் இப்படத்திற்கு, தமன் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஷால் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் படத்தின் போஸ்டரானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment