hfrhf

நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்குப் பணி புரியும் உதவியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார். மேலும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்டம், கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கி உள்ளார்கள் மற்றும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை விஷாலின் தேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் செய்துவருகிறார்.

Advertisment