சண்டக்கோழி 2 படத்தையடுத்து தற்போது அயோக்கிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் விஷால் அடுத்ததாக டைரக்டர் அவதாரம் எடுக்க இருக்கிறார். தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. விஷால் இயக்கயுள்ள முதல் படம் விலங்குகளை பற்றியது. மொழிகளை கடந்து பல நாடுகளில் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையான கதையம்சத்தில் இந்த படம் இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
தெருநாய்களும் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். விஷால் ஏற்கனவே விலங்குகளுக்கு ஆதரவாகவும், விலங்குகளை சுட்டுகொல்வதற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் நீண்டகாலமாக யோசித்து வைத்திருந்த விலங்குகள் சம்பந்தமான கதை இப்போது இறுதி வடிவத்துக்கு வந்துள்ளது என்றும், இன்னும் சில மாதங்களில் படத்தின் தலைப்பு நடிகர்கள் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.