Advertisment

'நாங்கள் சம்பந்தமே இல்லாத ப்ரொஜெக்டருக்கு செலவழித்து வருகிறோம்' - விஷால்  

vishal

Advertisment

தியேட்டர்களில் கியூப்பிற்கு மாற்றாக மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசும்போது... "இந்த 'மைக்ரோப்ளக்ஸ்' வசதி 'ஐடி' நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாக இலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக 'மைக்ரோப்ளக்ஸ்' ஆல்பர்ட்-க்கு நன்றி. இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் அலுவலகம் இருக்கிறது. ஆனால், இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கு வாடகை கிடையாது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோப்ளக்ஸ்-ன் ரஞ்சித்தை வரவேற்கிறேன். அதேபோன்று, 'ப்ரைம் போக்கஸ்' உடன் இணைவதிலும் மகிழ்ச்சி. ஏனென்றால், தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ப்ரொஜெக்டருக்கு செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போதுதான் ப்ரைம் போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் அந்த தொகையைக் குறைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கித் தந்தவர் ஆல்பர்ட். மேலும் ஒரு சிறப்பம்சம் 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டர் இருக்கிறது. அதை சென்சார் மற்றும் திரைப்பட வெள்ளோட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். நான் படம் தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் புரிந்தது. ஆனால், அவர்கள் தயாரிக்காமலே தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இந்த சலுகையை அளித்திருக்கிறார்கள். இப்படிபட்ட நண்பர்களை இழந்து விடாமல் எல்லோரும் நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவிதமான தடையாக இருந்தாலும் அதை உடைத்து விடலாம். எந்த விஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வது தான் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். எங்களுக்கென்று ஒரு அலுவலகம் அமைந்திருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மென்மேலும் வளரணும். அதனுடன் சேர்ந்து மைக்ரோப்ளக்ஸ்-ம், ப்ரைம் போக்கஸ்-ம் வளர வேண்டும்.

tamilcinemaupdate theaterstrike FEFSI vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe