Advertisment

'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டியை தாக்கிய விஷால் 

vishal

விஷால் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதையடுத்து இப்படத்தை தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். இது தற்போது தெலுங்கு தேசத்திலும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் வெற்றி சந்திப்பில் கலந்துகொள்ள விஷால் தெலுங்கு தேசத்திற்கு சென்றார். இதற்கிடையே தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் நடிகர் நானி மீது பாலியல் தெரிவித்து திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்நிலையில் நடிகர் வெற்றி சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்... "இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் சினிமா கம்பெனி என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை அமைத்து நடிக்க வைக்கிறேன் என்று நடிகைகளை தவறாக பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. நானியை எனக்கு நன்றாக தெரியும். நானி மீது ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு கூறி இருப்பது மிக கொடூரமானது. இப்போது நானியின் பெயரை கூறுபவர் அடுத்து வேறு ஒரு பெயரை கூறுவார். ஸ்ரீ ரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்திவிட்டு தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

srileaks srireddy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe