Published on 23/11/2018 | Edited on 23/11/2018

விஷால் நடிக்கும் 'அயோக்யா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரில் விஷால் கையில் பீர் பாட்டில் இருந்ததற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கண்டனத்திற்கு விஷால் விளக்கம் அளித்து பேசியபோது... "நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன். நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்" என்றார்.