Advertisment

மும்மத வழிபாடுகளையும் மேற்கொண்ட விஷால்

vishal celebrated aayudha pooja with workers

மார்க் ஆண்டனி பட வெற்றியைத்தொடர்ந்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Advertisment

தூத்துக்குடியில் எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக சொன்னார்கள். உடனே விஷால், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Advertisment

இதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத்தனது அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறார். இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவரது அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையில் இந்து, கிறிஸ்துவம், முஸ்லீம் ஆகிய மும்மத வழிபாடுகளையும் மேற்கொண்டார். பின்பு தூய்மைப் பணியாளர்களுக்குப் பரிசுப்பொருட்கள் வழங்கினார்.

actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe