கடந்த 2017ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். விஷால் நடித்ததிலேயே விமர்சகர்கள் ரீதியாகவும், பார்வையாளர்கள் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற படம் என்று சொல்லலாம்.

இந்த படத்தில் விஷால் ‘கணியன் பூங்குன்றனார்’ என்ற துப்பறியும் நிபுனராக நடித்திருப்பார். அவரின் உதவியாளராக பிரசன்னா நடிக்க, பாக்யராக், வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஆங்கில படமான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் என்ற டிகெட்டிவ் படம்போல தமிழில் துப்பறிவாளன் என்றொரு டிகெட்டிவ் படத்தை உருவாக்கினார் மிஷ்கின். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து துப்பறிவாளன் 2 எடுக்க மிஷ்கினும், விஷாலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆக்ஷன் படம் வெளியான பிறகு விஷாலை வைத்து மிஷ்கின் லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார். முதலில் மிஷ்கினின் புகைப்படங்களே வெளியான நிலையில் தற்போது விஷால் மற்றும் பிரசன்னாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு.