/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitledff.jpg)
தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களுக்கு பி.ஆர்.ஓவாக இருந்து வந்த பி.ஏ.ராஜு நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜு காலமானார். தெலுங்கு சினிமா பத்திரிகையாளராகவும், திரைப்படங்களின் புரமோஷன்களை கவனித்து வந்த இவர் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார். இவரது திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஷால் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"பி.ஏ.ராஜு சார் ஒரு அன்பான நண்பர். ஒரு சகோதரர், ஒரு உண்மையான நலம் விரும்பி, எனது தொழிலில் என்னை ஊக்குவித்தவர். அவர் என்னயுடைய ஏற்ற இறக்கங்களிலும் என்னுடனேயே இருந்தார். இந்த இழப்பை சமாளிக்க எனக்கு நீண்டகாலம் எடுக்கும். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)