Skip to main content

விஷாலுக்கு நிச்சயதார்த்தம்...தள்ளிப்போகும் படம்...

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

‘சண்டக்கோழி 2’ படத்திற்கு பின் விஷால் நடித்து வரும் படம்  ‘அயோக்யா’. இது தெலுங்கு படமான டெம்பர் படத்தின் ரீ-மேக். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்திருந்தார். அயோக்யா படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
 

vishal


 

கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 19ஆம் தேதி அயோக்யா வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு. ஆனால், இன்னும் ஒரு பாடல் படமாக்கப்படவில்லை என்பதால் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது.
 

முதலில் அந்த பாடலுக்கு சன்னி லியோனை ஆட கால் ஷீட் கேட்கப்பட்டது. பின்னர், நிறைய சிக்கல்கள் இருந்ததால் சனா கான் நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விஷாலுக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் மார்ச் 16ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. திருமண வேலைகளில் விஷால் பிஸி மற்றும் பாடல் படமாக்கப்படாததால், ரிலீஸ் தள்ளிப் போகிறது.
 

இதன் காரணமாக ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாவகதாக இருந்த அயோக்யா, மே-10ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

 

 


 

சார்ந்த செய்திகள்