/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/27_23.jpg)
‘எனிமி’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'விஷால் 31' எனப் பெயரிட்டு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அப்டேட்டை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (29.08.2021) வெளியாகவுள்ளது.
‘விஷால் 31’ படத்திற்கான சண்டைக்காட்சி படமாக்கலின்போது விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் ஃபிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)