Advertisment

ஏன் சாப்பிடல? - கோபம் கொண்ட விஷால்

Advertisment

vishal angry to farmers in his 34 film shooting spot

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்து முடிந்தது. தூத்துக்குடியில், குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் சொன்ன பிறகு உடனே 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார் விஷால். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Advertisment

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்றது. கடந்த தீபாவளியன்றும் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அங்குள்ள அனைவருக்கும் சமபந்தி கறி விருந்து அளித்தார். இதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தனது அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் விஷாலை சந்தித்தனர். அப்போது விவசாயிகள் அவர்களது பிரச்சனைகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது விவசாயிகளுடன் வந்திருந்த பெண்ணிடம், சாப்பிடிங்களா மா... என கேட்டார். அதற்கு இல்லை என அந்த பெண்மணிபதிலளிக்க, ஏன் சாப்பிடல? முதலில் போய் சாப்பிடுங்க என அக்கறையுடன் கோபப்பட்டார். பின்பு அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

actor vishal vishal 34
இதையும் படியுங்கள்
Subscribe